ஜெயலலிதா பயோகிராபி: மூன்றெழுத்தில் சூப்பர் தலைப்பு!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து படத்தை இயக்குனர் விஜய் உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் தலைப்பை ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளார்.
தலைவி என்று பெயர் வைத்துள்ள விஜய், அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நிரோஷா ஒளிப்பதிவு செய்கிறார். தலைவி படத்தை வைப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கிறார்.