வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 பிப்ரவரி 2019 (16:00 IST)

பாஜகவுடன் கூட்டணி வெச்சும் தம்பிதுரைக்கு நக்கல் அடங்கல..?

பாஜகவுடன் கூட்டணி கிடையாது கிடையாது என பல விமர்சனங்களை முன்வைத்த தம்பிதுரை தற்போது கூட்டணி அமைத்துள்ள பாஜக - அதிமுக பற்றி பேசியுள்ளார். 
 
அதிமுக - பாஜக கூட்டணி நேற்று இறுதி கட்டமாக பேசி முடிவு எடுக்கப்பட்டது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தம்பிதுரை பேசியது பின்வருமாறு, 
 
அதிமுக - பாஜக கூட்டணி என்பது கட்டாய திருமணம் என விமர்சிக்கிறார் திருநாவுக்கரசர், கட்டாய திருமணம் செய்து வைக்க திருநாவுக்கரசர் என புரோகிதரா?
 
இப்போது புரோகிதர் பதவி கூட இல்லாமல் திருநாவுக்கரசர் அம்போவென நிற்கிறார். அரசியலில் எதிர்க்கட்சிகளாக இருந்த அதிமுகவும் பாஜகவும் தற்போது நட்பு கூட்டணியாக உருவாகியுள்ளது. 
அதிமுக - பாஜக கூட்டணியால் மக்களுக்குத்தான் லாபம். இனி தமிழகத்துக்காக பாஜகவிடம் ரூ.20 ஆயிரம் கோடி அல்ல ரூ.50 ஆயிரம் கோடி கூட நிதி கேட்கலாம் என பேசியுள்ளார். 
 
இவ்வளவு நிதி வாங்கலாம் என அவர் பேசியுள்ளது, பாஜகவை கிண்டல் செய்தா? அல்லது கூட்டணி அமைத்துவிட்டதால் நல்லது நடக்கும் என்ற எண்ணத்துடனா? என தெரியவில்லை.