புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (12:21 IST)

சென்னையில் வடமாநில தீவிரவாதி கைது – போலிஸார் விசாரணை !

சென்னையில் வடமாநிலத்தை சேர்ந்த  கந்தர்ப்பதாஸ் எனும் தீவிரவாதி ஒருவரைப் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநிலத்தில் இருந்து தப்பி வந்த தீவிரவாதி  ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநிலத்தில் இருந்து தப்பிவந்த கந்தர்ப்பதாஸ் எனும் தீவிரவாதி சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக கடந்த 6 மாத காலமாகப் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று அவர் தங்கியிருந்த அறையில் உள்ளவர்களுடன் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டபோது கந்தர்ப்பதாஸ் தான் ஒரு உல்ஃபா தீவிரவாதி என்று எச்சரித்துள்ளார். இதையடுத்து  அறையில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் படி தமிழக போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அவரைப்பற்றிய தகவல்களை  வடமாநிலப் போலீஸாரிடம் இருந்து பெற்ற போது அவர் கூறியது உண்மை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து கந்தர்ப்பதாஸைக் கைது செய்த போலிஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.