டென்ஷன் ப்ஃரீ ! சென்னையில் முதன் முதலாக ஆன்லைனில் டீசல் விற்பனை ...
ஆன்லைனில் டீசல் விற்க வேண்டுமென மக்கள் பலரும் பல ஆண்டுகளாகவே மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து நாட்டிலேயே முதன் முதலாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கொளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை மையத்தில் இன்று மாலை ஆன்லைனில் டீசல் விற்பனை தொடங்கியது.
இதில் முதல் கட்டமாக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் வசதி உள்ளது. இதற்கு எவ்விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ரீபோஸ் ஆப்' என்ற செயலி மூலம் டீசலை ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.