புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:09 IST)

சென்னைக்கு வறட்சியா? வெள்ளமா? பஞ்சாங்கம் சொல்வது என்ன?

இலங்கையில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த சுழற்சியால் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு ஏற்றார் போல் சென்னையில் இப்போது மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. மழைக்கான அறிகுறியும் தெரிகிறது. சென்னைக்கு இதனால் பெரிய ஆபத்து ஓன்றும் இல்லை. லேசான மழை மட்டுமே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த ஆண்டு துவங்கும் போது வெளியான பஞ்சாங்கத்தில் சென்னைக்கு வெள்ளம் அல்லது வறட்சி ஆபத்து இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில் இரண்டு புயல்கள் தாக்கினாலும் சென்னைக்கு எந்த் ஆபத்தும் ஏற்படவில்லை. 
 
இன்னும் சொல்ல போனால் பெரிதாக மழை கூட இல்லை. எனவே, சென்னைக்கு வெள்ளத்தால் ஆபத்து இல்லை என தெளிவாகிவிட்டது. அப்போது வறட்சி தாக்குமோ? என்று கேட்டால் அதற்கு வாய்ப்புகள் அதிகம்தான். 
 
சென்னையில் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் தற்போது 1.5 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. கடந்த வருடம் 5 டிஎம்சி நீர் இந்த இருந்த போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு பருவ மழையும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. 
 
எனவே, வறட்சிக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. ஆனால், ஜனவரி மாதத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் தண்ணீரை சிக்கனமாய் பயன்படுத்துவது அடுத்தடுத்த மாதங்களுக்கு உதவும்.