செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (08:27 IST)

ஓபிஎஸ் தோஸ்து பா எனக்கு: ஒரு கோடியை ஆட்டைய போட்ட வாலிபர்

துணை முதல்வரின் பெயரை கூறி வாலிபர் ஒருவர் 1 கோடியை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்த சரனவகுமார் என்பவன் தனக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது மகனையும் நன்றாக தெரியும் என்று கூறி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பலர் அவனிடம் வேலைக்காக பணம் கொடுத்துள்ளனர். இவ்வாறு பலரிடம் 1 கோடி வரை ஆட்டையை போட்டுள்ளான் இந்த அயோக்கியன்.
 
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் அந்த கேடுகெட்டவனை கைது செய்தனர். அவனை விசாரித்ததில் அவன் ஒரு டம்மி பீஸ் என தெரியவந்தது. அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.