செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:56 IST)

ஜனவரி 14 - 18 அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதியில்லை!

ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு. 

 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் இருப்பினும் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் வரும் ஜனவரி 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
அதில் ஒன்று ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை வருவதால் மக்கள் கோவிலுக்கு அதிகம் செல்லுவதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.