அம்மன் சிலை முன் காதல் பாடலுக்கு டிக்டாக்: பூசாரிகளின் அட்டுழியம்

அம்மன் சிலை முன் காதல் பாடலுக்கு டிக்டாக்
Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (08:30 IST)
அம்மன் சிலை முன் காதல் பாடலுக்கு டிக்டாக்
கோவில் பூசாரிகளாக பணிபுரியும் இரண்டு இளைஞர்கள் அம்மன் சிலை முன் காதல் பாடலுக்கு நடனமாடிய டிக் டாக் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவையைச் சேர்ந்த பிரசாத் மற்றும் பிரதீப் ஆகியோர் அங்கு உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் பூசாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது டிக்டாக்கில் வீடியோவை பதிவு செய்து வந்த நிலையில் தங்களுடைய வீடியோவுக்கு லைக்ஸ் கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த இந்த இளைஞர்கள் இருவரும் அம்மன் கோவிலில் அம்மன் சிலை முன் காதல் பாடலுக்கு நடனமாடி அம்மனையே கதாநாயகி போல் வடிவமைத்து வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவு செய்துள்ளனர்
இந்த வீடியோ பயங்கர வைரலாகியது. அம்மன் சிலை முன் காதல் பாடலுக்கு நடனமாடி டிக் டாக் வீடியோ எடுத்த இந்த இளைஞர்களுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன இந்த இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போன்றவர்களை பூசாரிகளாக வைத்திருப்பது சரியானதல்ல என்றும் உடனே அவர்களை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து கோவில் நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :