ஜீவா நடிக்கும் சீறு படத்தின் புதிய மேக்கிங் வீடியோ !

papiksha| Last Updated: வியாழன், 13 பிப்ரவரி 2020 (18:25 IST)

சீறு பாடல் மேக்கிங் வீடியோ இதோ...
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கருத்துக்கள் கொண்ட படங்களை,
ரசிகர்களை கவரும் வகையில் வெற்றிப்படங்களாக தந்து வரும் Vels Films International சார்பில் Dr. ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “சீறு”.

நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரத்ன சிவா எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிகை ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, வருண் மற்றும் காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்ற கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்று தற்போது பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் பாடல் மேக்கிங் வீடியோவை பிரபல இணையதள சேனல் ஒன்று தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்.


இதில் மேலும் படிக்கவும் :