திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (08:09 IST)

டிக் டாக் காதலியைத் தேடி சென்ற குடும்பஸ்தன் – மனைவி போலிஸில் புகார் !

முரளிதரன்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான முரளிதரன் என்பவர் டிக்டாக் மூலம் பழக்கமான பெண்ணுடன் வாழ்வதற்காக மனைவியை கைவிட்டு சென்றுள்ளார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த முரளிதரனுக்கு திருமணமாகி அந்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டதால் குடும்பத்தார் ஒருப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். முரளி டிக்டாக்கில் ஜாலியாக நடனம் ஆடுவது மற்றும் டூயட் பாடல்கள் பாடுவது போன்ற வீடியோக்களை  வெளியிட்டு ஜாலியாக உலாவர ஆரம்பித்துள்ளார்.

இவரது வீடியோக்களைப் பார்த்து திருச்சியை சேர்ந்த ஒரு பெண் அவரோடு டூயட் பாடல்களுக்கு வீடியோ போடும் அளவுக்கு நெருக்கமாகியுள்ளனர். இந்நிலையில் இந்த விவரங்கள் எல்லாம் முரளியின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. முதலில் இதை நடிப்பின் மேல் உள்ள ஆர்வம் என சொன்ன முரளி, பின்னர் பொறுக்க மாட்டாமல் காதலியோடு தலைமறைவாகியுள்ளார். மேலும் அவர் டிக்டாக் காதலியை திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பித்துள்ளதாக அவரது குடும்பத்துக்கு செய்தி கிடைத்துள்ளது. இதனை அடுத்து கணவரை மீட்டுத்தர சொல்லி போலிஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்துள்ளார் முரளியின் மனைவி.