வெய்யோன் சில்லி முழு பாடல் இதோ... லிரிகள் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

papiksha| Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (17:41 IST)

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.
நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று இப்படம் முதல் சிங்கிள் பாடலை இந்திய சினிமாவில் இதுவரை யாரும் யோசித்து கூட பார்க்காத வகையில் spicejet boeing 737 ரக விமானத்தில் சென்று நடுவானில் வெளியிட்டனர்.

இந்த விமானத்தில் இதுவரை விமானம் ஏறாத 100 குழந்தைகளை அழைத்து சென்று அவர்களது ஆசையை நிறைவேற்றியுள்ளார். "வெய்யோன் சில்லி இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா " என்று தொடங்கும் இந்த ரொமான்டிக் பாடல், ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் உருவாகியுள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை ஹரிஸ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார். இன்று மதியம் இப்பாடலின் ப்ரோமோ வீடியோ வந்ததையடுத்து சற்றுமுன் இப்பாடலின் லிரிகள் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :