ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (16:51 IST)

கஞ்சா வியாபாரம் தொடர்பாக வாலிபர் கொலை! – மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

Murder
மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 23 )இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார்.


 
கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இஸ்மாயிலை  கொலை செய்திருக்கலாம்  என ஆஸ்டின் பட்டி  போலீசார் விசாரணையில்  தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் இதே பகுதியை சேர்ந்தவர்களுடன் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நண்பர்களுக்கு கஞ்சா வாங்கி தருவதாக கூறி பணத்தைப் பெற்றுள்ளார்.

ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட இஸ்மாயில் கஞ்சா தராமல் இழுத்து அடித்துள்ளதால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் இஸ்மாயில் டூவீலரில் ஆஸ்டின்பட்டி பகுதிக்கு கடத்திச் சென்று கஞ்சாவை தொடர்பாக கொடுத்த பணத்தை கேட்டுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நேற்று இரவு இஸ்மாயில் தாக்கி உள்ளனர் . இதில் நிலைத்திடுமாறி விழுந்த இஸ்மாயில் எழுந்திருக்கவில்லை என  கூறப்படுகிறது மேலும் இது தொடர்பாக ஆசியம்பட்டி போலீசார் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த ஐந்து பேரை விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இறந்த இஸ்மாயில் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் அசம்பட்டி தோப்பூர் அரசு மருத்துவமனை அருகே வட மாநில தொழிலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது

இந்நிலையில் அதே பகுதியில் கஞ்சா வியாபாரம் தொடர்பாக வாலிபர் கொலை செய்யப்பட்டது. தோப்பூர் பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது

 கூத்தியார்குண்டு முதல் கரடிக்கல் வரை உள்ள சாலைகள் மின்விளக்கு இல்லாததால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனால் சமூக விரோதிகளுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உள்ளது

மேலும் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.

தொடர்ந்து இரு நாட்கள் அடுத்தடுத்து கொலை சம்பவம் நடந்துள்ளதால் பொது மக்களிடையே ஏற்பட்ட அச்சத்தை போக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.