புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 மே 2020 (09:11 IST)

அவசர கால உதவி எண் 100 ஐ அழைப்பதில் சிக்கல்! மாற்று எண் இதோ!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரகால உதவி எண்ணான 100 ஐ அழைப்பதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் –ல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ போன்ற சிம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைப்புகளை பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவசர அழைப்புகளுக்கு 044 - 46100100 மற்றும் 044 - 71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.