திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:28 IST)

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் தேர்வு தேதி மாற்றம்!

teachers
ஆசிரியர் தகுதி தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் இந்த தேர்வு தேதிகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
 
 ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த தேர்வு 15ஆம் தேதி வரை நடக்கும் என்றும் கணினி வழியில் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது