வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (16:42 IST)

துரத்தி துரத்தி மாணவியை காதலித்து , பாலியல் டார்ச்சர் செய்த ஆசிரியர் ...

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த உடற்பள்ளி ஆசிரியர் அன்ங்கு படித்துவரும் + 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அம்மாணை புகார் கொடுக்கவே போஸ்கோ சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பாலசந்திரன் (23) பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் படித்துவரும் 12 ஆம் வகுப்பு மாணவியை ஒரு தலையாகக் காதலித்துவந்தார்.
 
மாணவி பள்ளியில் படிக்கும்போது தனியா அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் +2 முடிவுகள்  வெளியான நிலையில் அம்மாணவு ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார். ஆனால் விடாட பாலச்சந்திரன் அம்மாணவிக்கு செல்போன் மூலம் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
.
இதில்லாமல் அம்மாணவியைத் தேடி ஸ்ரீவில்லிப்புதூருக்கு வந்துள்ளார். அங்கும் மாணவிக்கு தொல்லை கொடுத்ததால் மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.இதனையடுத்து பெற்றோர் போலிஸாரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் உடற்கல்வி ஆசிரியரை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.