வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (11:11 IST)

இரண்டு முறை ஏமாற்றிய காதலன்- சென்னைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !

சென்னைப் இளம்பெண் ஒருவரைக் காதலித்து இருமுறைக் கர்ப்பமாக்கிய இளைஞர் திருமணத்துக்கு மறுத்தது மட்டுமல்லாமல் தலைமறைவாகவும் ஓடி ஒளிந்துள்ளார்.

சென்னைப் பம்மலை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் பூந்தமல்லிப் பகுதியை சேர்ந்த லத்திபா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அரவிந்தை நம்பிய லத்திபா அவரோடு நெருக்கமாகப் பழகியுள்ளார். இதனால் லத்திபா கர்ப்பமாகியுள்ளார். இதை அறிந்த லத்திபா அரவிந்தை உடனடியாகக் கல்யாணம் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அரவிந்த் மறுக்கவே அவரது வீட்டுக்கு சென்ற லத்திபா அரவிந்த் குடும்பத்தினர் முன் நீதி கேட்டுள்ளார். இதனால் கோபமான அரவிந்த் லத்திபாவைத் தாக்கியதால் அவரது கர்ப்பம் கலைந்துள்ளது. இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்தனர். அதன் பின்னர் சில நாட்களிலேயே லத்திபாவைத் தொடர்பு கொண்ட அரவிந்த் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு காதலைப் புதுப்பித்துள்ளார்.

அரவிந்தின் பேச்சை நம்பிய லத்திபா அவருடன் மீண்டும் பழக இரண்டாவது  முறையாக கர்பமாகியுள்ளார். இம்முறையும் அரவிந்த் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் லத்திபா பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதை அறிந்த அரவிந்த் தலைமறைவாகியுள்ளார். அரவிந்தைக் கண்டுபிடிக்க சொல்லி லத்திபா பம்மல் காவல்நிலையத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதன் பின்னர் போலிஸார் சமாதானப்படுத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.