திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 அக்டோபர் 2020 (16:18 IST)

தலைமை ஆசிரியரின் கையெழுத்தைப் போட்ட ஆசிரியர் – செய்த சிறிய தவறால் மாட்டிக் கொண்ட சம்பவம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் வேலை செய்து வரும் ஆசிரியர் தலைமை ஆசிரியரின் கையெழுத்தைப் போட்டு மோசடி செய்துள்ளார்.

அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கணினி பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சரவணன். இவர் பள்ளியில் முறையாக நடந்து கொள்ளாததால் அவருக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இந்நிலையில் சரவணன் பி எட் படிப்பதற்காக டெல்லியில் உள்ள திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அதற்கான விண்ணப்பத்தில் தலைமையாசிரியர் சின்னதுரையின் கையொப்பத்தை தானே போட்டு பள்ளி முத்திரையுடன் அனுப்பியுள்ளார். ஆனால் விண்ணப்பத்துக்கான வரைவோலை தொகையான 500 ரூபாய்க்கு பதில் 400 ரூபாய் மாற்றி அனுப்பியதால் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பம் தலைமை ஆசிரியர் கைகளில் கிடைக்க சரவணனின் மோசடி லீலை அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து தலைமை ஆசிரியர் போலிஸில் புகார் கொடுக்க காவல்துறையினர் தலைமறைவான சரவணனை தேடி வருகின்றனர்.