வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (12:56 IST)

மாணவிக்கு காதல் வலை விரித்த ஆசிரியர்: ஆப்பு வைத்த கல்வி அலுவலர்

திண்டுக்கல் அருகே பிளஸ் 2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலரால் இடை நீக்கம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அருகே உள்ள தருமப்பட்டியில் இயங்கி கொண்டிருக்கும் அரசு பள்ளியில் ப்ளஸ் 2 படித்த மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் அசோக் குமார் என்பவர், காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

அசோக் குமார் அந்த மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த செய்தி, பள்ளி முழுவதும் பரவியது. பின்பு இதனை குறித்து பள்ளி நிர்வாகத்தால் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைக்கு அடுத்து, மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய அசோக் குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் உத்தரவிட்டார்.

இவ்வாறு மாணவிக்கு ஆசிரியரே காதல் கடிதம் கொடுத்த சம்பவம், அப்பள்ளி மாணவிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.