1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (09:31 IST)

திருமணமான ஆசிரியையுடன் மாணவன் கள்ளக்காதல்: தர்ம அடி கொடுத்த பெற்றோர்

திருமணமான ஆசிரியையுடன் மாணவன் கள்ளக்காதல்: தர்ம அடி கொடுத்த பெற்றோர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பகவான் என்ற ஆசிரியரின் இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் குறித்த செய்தியை பார்த்தோம். அந்த அளவுக்கு மாணவர்களிடம் நற்பெயர் பெற்ற ஆசிரியர் இருக்கும் நிலையில் மாணவர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு தகாத உறவில் இருந்த ஒரு ஆசிரியை குறித்த செய்தியும் வந்துள்ளது.
 
குடியாத்தம் பகுதியை சேர்ந்த 23 வயது ஆசிரியைக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் பள்ளிப்பணி முடிந்தவுடன் வீட்டிலும் அவர் டியூஷன் எடுத்துள்ளார். அவரிடம் டியூஷன் படிக்க வந்த 16 வயது மாணவனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனையடுத்து திடீரென ஒருநாள் ஆசிரியை மாணவனுடன் ஊரைவிட்டே சென்றுவிட்டார். 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியையின் கணவர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆசிரியை, மாணவர் இருவரும் மைசூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் இருவரையும் அழைத்து வந்து ஆசிரியையை கணவருடனும், மாணவரை பெற்றோருடனும் அனுப்பி வைத்தனர். 
 
திருமணமான ஆசிரியையுடன் மாணவன் கள்ளக்காதல்: தர்ம அடி கொடுத்த பெற்றோர்
இந்த நிலையில் ஆசிரியை தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். கள்ளக்காதல் ருசிகண்ட மாணவன், ஆசிரியையை சந்திக்க அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரியையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் பிடித்து கொடுத்துள்ளனர். இதனையடுத்து மாணவருக்கு மனநல மருத்துவர் கவுன்சிலிங் கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது