புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (07:20 IST)

டீக்கடைகள் திறக்கப்பட்டன: இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆரம்பம்

டீக்கடைகள் திறக்கப்பட்டன: இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆரம்பம்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாகவும் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் உண்டு என அறிவித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அதில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறப்பது, டீ கடைகள் மற்றும் இனிப்பு கார வகைகள் கடை திறப்பது, செல்போன் சர்வீஸ் கடைகள் திறப்பது உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் இன்று காலை 6 மணிக்கே தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் டீக்கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின்னர் டீ கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் ஆர்வத்துடன் டீ வாங்கி செல்கின்றனர் .டீக்கடைகளில் நின்றோ உட்கார்ந்தோ டீ குடிக்க அனுமதி இல்லை என்பதால் அனைவரும் பார்சல் வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதேபோல் இன்னும் சில மணி நேரத்தில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுவிடும் என்பதும் குடிமகன்களுக்கு இன்று முதல் கொண்டாட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மிக்சி கிரைண்டர் தொலைக்காட்சி விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடைகள், இ சேவை மையங்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.