1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 26 அக்டோபர் 2019 (08:51 IST)

கடைக்குள் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த டெய்லர் – நண்பனேக் கொன்றதன் பின்னணி !

தர்மபுரியில் தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த நண்பனைக் கொலை செய்து கடைக்குள் பூட்டிவிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் இன்பவளவன். அங்கு டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். இவர் கடை சில நாட்களாகப் பூட்டிக் கிடந்துள்ளது. அவரும் யார் கண்ணிலும் படவில்லை. இந்நிலையில் அவர் கடைக்குள் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது. அதையடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கடையைத் திறந்து பார்த்தபோது அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்துப் போலிஸுக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

விசாரணையில் மகேந்திரன் என்பவரும்  இன்பவளவனும் நீண்டநாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நட்புரீதியாக அடிக்கடி மகேந்திரன் வீட்டுக்கு சென்ற இன்பவளவன் மகேந்திரனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த விஷயம் அறிந்த மகேந்திரன் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதலை நிறுத்தாத இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். எனவே அவர்களின் கள்ளக்காதல் சம்மந்தமாகப் பேச மகேந்திரன் இன்பவளவனின் டெய்லர் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே எழுந்த வாக்குவாதத்தில் மகேந்திரன், இன்பவளவனை நாற்காலியால் தாக்கியுள்ளார். பின்னர் கயிறால் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இன்பவளவனின் செல்போன் மற்றும் நண்பர்களிடம் நடந்த விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது.