திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (13:27 IST)

தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தற்கொலை!

தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தற்கொலை!

இந்தியாவை பொருத்த வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மதுரையில் ஏற்கனவே கொரோனா தொற்று இருந்தவரின் குடும்பத்தில் மேலும் இருவருக்கும், ஈரோடு மற்றும் சென்னையில் தலா இருவரும் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.  

இந்நிலையில்,புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மரமடக்கி என்ற கிராமத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த அவரை பெற்றோர் பெற்றோர் , கொரோனா அச்சத்தின் காரணமாகழ் அவரை வீட்டில்  தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.