தமிழக அரசு பேருந்து கழகங்கள் சார்பில் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் பாஸ் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் முன்பு ஒருநாள் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்ய ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோல், ஒரு மாதாந்திர பாஸ் தொகை ரூ.1000 ஆக இருந்தது. அந்நிலையில்தான், சமீபத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. எனவே, ஏற்கனவே பாஸ் வைத்திருந்தவர்கள் எத்தனை நாட்களுக்கு அதை பயன்படுத்த முடியும் என்கிற குழப்பம் ஏற்பட்டது....