புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (14:30 IST)

போர்டு ஆலையை வாங்கும் டாடா??

போர்டு ஆலையை டாடா நிறுவனம் வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல். 
 
உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான போர்டு நிறுவனத்தின் கிளை ஒன்று சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் உள்ளது. போர்டு இந்தியா நிறுவனம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு காரணமாக சென்னையை அடுத்த மறைமலைநகர் மற்றும் குஜராத் சாமன்ட் நகர் ஆலைகளை மூடுவதாக அண்மையில் அறிவித்தது. 
 
இந்நிலையில் மறைமலைநகர் போர்டு ஆலையை டாடா நிறுவனம் வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடனான 2வது சுற்று உயர்மட்ட பேச்சுவார்த்தை 2 வாரத்தில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.