வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (11:46 IST)

டாஸ்மாக் கடை நேரத்தை மாற்றியது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

டாஸ்மார்க் கடை நேரத்தை மாற்றியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
 
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அதன் பின் மீண்டும் திறக்கப்பட்டு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீரென சமீபத்தில் 12:00 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது டாஸ்மாக் கடை நேரத்தை மாற்றியது ஏன் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கு டிசம்பர் 18-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.