திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:32 IST)

தமிழகத்தில் நுழைந்த தற்கொலை மோசடி கும்பல்.. போலீசார் எச்சரிக்கை..!

தற்கொலை செய்து கொண்டதாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் இதுவரை வட இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த கும்பல் தமிழகத்தில் நுழைந்திருப்பதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் 
 
இந்த மோசடியில் ஒரு இளம்பெண் நடுத்தர மற்றும்  பணக்கார வர்க்கத்தினர்களை தொடர்பு கொண்டு போனில் பேசுவார். தன்னை மாடல் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு புன்னகையுடன் அவர் சில மணி நேரங்கள் பேசுவார். 
 
அதன் பிறகு திடீரென போலீஸ் என்ற அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு போன் வரும். அதில் சற்றுமுன் உங்களுடன் பேசியவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருப்பதாகவும் கூறி பணம் கேட்டு மிரட்டும். 
 
இந்த மிரட்டல் காரணமாக ஏற்கனவே இரண்டு கொல்கத்தா மருத்துவர்கள் ஏமாறியுள்ளதாகவும் இந்த கும்பல் தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது
 
Edited by Siva