திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (10:59 IST)

வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கெட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை..!

வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டி கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பூர் அருகே பல்லடம் என்ற பகுதியில் நேற்று ஒரு நபர் வீட்டின் அருகே மது அருந்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகியோர் அந்த மது அருந்திய நபரை கண்டித்தனர்.
 
இதனை அடுத்து மது அருந்தி நபர் தன்னுடைய நண்பர்களை அழைத்து வந்து அந்த வீட்டில் புகுந்து நான்கு பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.  இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அந்த கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். 
 
மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில்  ஈரோடு திருப்பூர் கோவை நாமக்கல் பகுதி காவல்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
Edited by Mahendran