1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tasmac shops schedule time changed

டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம்! – வழக்கமான நேரத்தில் இயங்கும்!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா காரணமாக டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வழக்கமான நேரத்தில் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைகள், மது பார்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது. தற்போது கொரோனா குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் செயல்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி இனி டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
54 நொடிகள் இருளை உருவாக்கும் கடைசி கிரகணம்