புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (11:45 IST)

அதிமுகவில் தேர்தல் நடக்க கூடாது! – கேசி பழனிசாமி வழக்கு!

அதிமுகவில் தேர்தல் நடக்க கூடாது! – கேசி பழனிசாமி வழக்கு!
அதிமுகவில் நடைபெற உள்ள ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலுக்கு அதிமுகவை சேர்ந்த கே.சி.பழனிசாமி தடை கோரியுள்ளார்.

சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும் பணி இன்று தொடங்கிய நிலையில் அதிமுகவை சேர்ந்த கே.சி.பழனிசாமி இந்த தேர்தலை நடத்துவதற்கு தடைவிதிக்க கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். கட்சி வழிமுறைகள்படி 21 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் தேர்தல் நடத்துவதால் அதை தடை செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.