1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:19 IST)

டென்மார்க், ஜெர்மனிக்கு பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை

டென்மார்க் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளது என்பதும் குறிப்பாக தற்போது ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இன்னும் கொரோனாவால் மிகவும் அபாய நிலையில் உள்ளதால் அந்த நாடுகளுக்கு அமெரிக்காவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது