அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணாமாக அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணாமாக அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், இன்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு பகுதியில் நகரத்தொடங்கி இலங்கைக்கும், தென் தமிழகத்திற்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.