1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (15:48 IST)

மதுரையில் தொடரும் டாஸ்மாக் கொள்ளை சம்பவங்கள்! – போலீஸார் விசாரணை!

Tasmac theft
தொடரும் டாஸ்மாக் கொள்ளை அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்


 
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி பகுதியில் அடுத்தடுத்து இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது இந்த கடைகள் ஊருக்கு வெளியே வயல் பகுதிகளில் இருப்பதால் போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக பொதுமக்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

மேலும்குற்ற சம்பவங்கள் அதிகரிக்கவும் இந்த டாஸ்மாக் கடைகளே காரணமாக இருப்பதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து கூறிவந்தனர். இதனால் இந்த கடைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

சில தினங்களுக்கு முன்பு கருப்பட்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளரை பட்டாக்கத்தி வைத்து மிரட்டி டாஸ்மாக் கடைக்குள் இருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் 200க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மது பாட்டில்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றிருந்த நிலையில் நேற்று இரவு  இரயில் நிலையம் அருகில் இருந்த மற்றொரு கடையில்  மதில் சுவரை துளையிட்டு உள்ளே இருந்த மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் டாஸ்மாக் கடை வாசலில் பட்டாகத்தி போட்டு விட்டு  கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர் கருப்பட்டி இரும்பாடி பகுதிகளில் சில தினங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் டாஸ்மாக் கொள்ளை சம்பவங்களால் கடை விற்பனையாளர்கள் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

ஆகையால் மாவட்ட  நிர்வாகம் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த இரு கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.