1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (20:18 IST)

தேர்தல் நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் எழுதிய நிலையில் தற்போது அதே விவகாரம் குறித்து மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
 
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழ் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் 
 
இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண தூதரக அளவில் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை அடுத்து பிரதமர் மோடி இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.