விரைவில் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்ய டாஸ்மாக் திட்டம்
டாஸ்மாக் ஹிப்பார் என்ற செயலியுடன் கைக்கோர்த்து தமிழகத்தை மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ஹிப்பார் செயலி மூலம் மதுபானங்களை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் வாங்கிக்கொள்ளலாம். நாம் இருக்கும் இடத்திற்கே நம்மை தேடி வந்து டெலிவரி செய்யும் வசதியும் உள்ளது. இந்த வசதி தற்போது இந்தியவில் பெங்களூர் நகரில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது.
தற்போது தமிழக டாஸ்மாக் இந்த ஹிப்பார் செயலியுடன் கைக்கோர்த்துள்ளது. இதன்மூலம் விருப்பப்பட்ட மதுபானத்தை எளிதாக கிடைக்கும் கடைகளில் வாங்க உதவியாய் இருக்கும். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மதுபானம் வாங்குபோது ஹிப்பார் செயலி மூலம் பணம் செலுத்தலாம். செயலியில் மது வகைகள், விலைகள் விபரங்கள் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். தற்போது சென்னையில் 6 நவீன கடைகளில் இந்த வசதி உள்ளது.
விரைவில், அனைத்து கடைகளுக்கும் இந்த ஹிப்பார் செயலி சேவை விரிவுபடுத்தப்படும். அதிக விலை உடைய மதுபானத்தை வாடிக்கையாளர் விரும்பும் இடத்திற்கே சப்ளை செய்யவும் வாய்ப்புள்ளது என்று கூறினார்.