Daily Horoscope

கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட்!

Written By mahendran
Updated: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:42 IST)
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் எல்லைக்கு உட்பட்ட  திருவரங்கம் டாஸ்மாக் மதுபானக் கடையில் பணியாற்றும் சோலைராஜ் மற்றும் ஜி ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றுள்ளனர். இது சம்மந்தமாக மது வாங்கிய வாடிக்கையாளர் அரசாங்கம் கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என கூறியிருப்பதை சுட்டிக்காட்டு கேள்வி எழுப்ப மரியாதைக் குறைவாக பேசி கூடுதல் விலைக்கு தான் விற்பேன் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

அதையடுத்து ராமநாதபுர மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கிட்டத்தட்ட எல்லா டாஸ்மாக் கடைகளிலும் இதுபோல அதிக விலைக்கும் பில் இல்லாமலும்தான் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments