ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2024 (11:16 IST)

அந்த ப்ராண்ட் சரக்கு வித்தாலும் வாங்காதீங்க! மதுப்பிரியர்களுக்கு டாஸ்மாக் எச்சரிக்கை!

தமிழக அரசின் ‘டாஸ்மாக்’ கடைகளில் மது வாங்குவோர் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் மதுவை வாங்குவதை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பல்வேறு வகையான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் விலைக் குறைவான உள்ளூர் மது வகைகளே மதுப்பிரியர்களின் முதல் சாய்ஸாக உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் அடிக்கடி தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்வாறாக பரிசோதிக்கப்பட்டதில் 2021ம் ஆண்டில் கோல்டன் வாட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பிராந்தி வகைகள் விற்பனைக்கு உகந்தது அல்ல்ல என தெரிய வந்துள்ளது. 
 

இதை தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ள மாவட்ட மேலாளர்கள், இந்த வகை மதுபானம் எந்த டாஸ்மாக் கடைகளில் இருந்தாலும் அவற்றை உடனடியாக மதுபான கிடங்குகளுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும், விற்பனை செய்ய வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த குறிப்பிட்ட ரக மதுபானத்தை பருகி வந்த மதுப்பிரியர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மதுபான ஆலை மன்னார்குடியில் இயங்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K