ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (11:57 IST)

டாஸ்மாக்கில் மது அருந்திய விவசாயி மார்பு வலி.. மருத்துவமனையில் அனுமதி..!

Tasmac
திண்டிவனம் அருகே டாஸ்மாக்கில் மது அருந்திய விவசாயி உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூர் என்ற பகுதியில் முருகன் என்ற விவசாயி டாஸ்மாக்கில் மது வாங்கி அருந்ததிதாக கூறப்படுகின்றது. சிறிது நேரத்தில் அவருக்கு மார்பு வலி ஏற்பட்டதோடு கண் பார்வையும் குறைந்த நிலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
அவரது கூச்சலை கேட்ட உறவினர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு முருகன் அனுப்பி வைக்கப்பட்டார். 
 
ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்த ஒருவருக்கும் உடல்நிலைக்குறைவு ஏற்பட்டுள்ளது குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva