திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:36 IST)

சென்னை குடிநீர் சிக்கலைத் தவிர்க்க டேங்க் மீ ஆப்! இளைஞர்களின் முயற்சி!

சென்னையில் குடிநீர் விநியோக சிக்கல்களை தீர்க்கும் விதமாக டேங்க் மீ என்ற நிறுவனத்தை இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.

கோடை காலங்களில் சென்னையின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் சலிப்புக்கும் அவதிக்கும் ஆளாகி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த எம்பிஏ மாணவர்கள் மூவர் இணைந்து டேங்க் மி என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கியுள்ள ஆப் மூலமாக வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள டேங்க் உரிமையாளர்களை எளிதில் அணுக முடியும் என சொல்லப்படுகிறது.

தற்போது சென்னையின் 70 பகுதிகளில் இந்த சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் சென்னை முழுவதும் விரிவாக்க திட்டமிட்டுள்ளனர்.