மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைவு!
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை நேற்றை போல இன்றும் விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை 3 வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,541க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை சவரனுக்கு 192 ரூபாய் குறைவாகும்.