1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:56 IST)

எடப்பாடி பழனிசாமி - தமிமுன் அன்சாரி சந்திப்பு.. ஸ்.பி.வேலுமணியுடன் முக்கிய ஆலோசனை..!

எடப்பாடி பழனிசாமி - தமிமுன் அன்சாரி சந்திப்பு இன்று நடைபெறும் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் சற்றுமுன் இந்த சந்திப்பு நடந்தது.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்துள்ள நிலையில், தமிமுன் அன்சாரியும் வந்திருந்தார்.
 
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது என்றும், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிசாமியை தமிமுன் அன்சாரி சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் உடன் உள்ளனர். 
 
Edited by Mahendran