1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamimun ansari speek with edappadi for alliance

எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார் தமிமுன் அன்சாரி.. புதிய கூட்டணியா?

தமிமுன் அன்சாரி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சற்று நேரத்தில் தமிமுன் அன்சாரி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக கழற்றிவிடப்பட்ட நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எடப்பாடி பழனிசாமி அழைப்பின் பேரில் அவரை சந்திக்க தமிமுன் அன்சாரி சேலத்தில் முகாம் இட்டு இருப்பதாகவும், அதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரி இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
 
அதுமட்டுமின்றி மேலும் சில கட்சிகளை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருப்பதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்