1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (13:33 IST)

வேதா இல்லம் வேண்டாம்.. டெபாசிட் தொகை வேண்டும்! – தமிழக அரசு மனு!

வேதா இல்லத்தை அரசுடமையாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட்ட நிலையில் டெபாசிட் தொகை திரும்ப பெற மனு அளித்துள்ளது.

முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லத்தை அரசுடமையாக்கி காட்சி இல்லமாக்க முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் வேதா இல்லத்தை தீபாவிடம் ஒப்படைத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து தற்போதுள்ள திமுக அரசு மேல்முறையீடு செய்யப்போவதில்லை என முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள தமிழக அரசு ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் முயற்சியை கைவிடுவதாகவும், வேதா இல்லத்தை விலைக்கு வாங்க அளிக்கப்பட்ட ரூ.68 கோடி டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும் மனு தாக்கல் செய்துள்ளது.