செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 மே 2019 (21:25 IST)

6 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்: இன்னும் எத்தனை நாளைக்கோ?

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்தே சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வெயில் நெருப்பாக கொதித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் பெரும் சிரமத்தில் உள்ளனர். 
 
ஓருசில நகரங்களில் கோடை மழை பெய்து வந்தாலும் பகலில் வெயில் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டியும் ஒருசில நகரங்களில் 100 டிகிரிக்கு அருகிலும் உள்ளது. 
 
வேலூரில் 106 டிகிரியும், மதுரை, திருத்தணி, திருச்சி ஆகிய நகரங்களில் 105 டிகிரியும், நெல்லையில் 104 டிகிரியும், சேலத்தில் 100 டிகிரியும் இன்று வெயில் அடித்தது. அதேபோல் தருமபுரியில் 99 டிகிரியும், சென்னை கடலூர், புதுவை ஆகிய பகுதிகளில் 97 டிகிரியும், கோவை, தூத்துக்குடியில் 95 டிகிரியும் வெயில் அடித்தது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 72 டிகிரி வெயில் அடித்தது. 
 
இம்மாத இறுதி வரை வெப்பம் அதிகம் இருக்கும் என்றும், ஜூன் முதல் வாரத்திற்கு பின்னரே வெயிலின் தாக்கம் குறையும் என்றும் கூறப்படுகிறது