ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்! –வெளியானது வாக்காளர் பட்டியல்

karur
Prasanth Karthick| Last Modified புதன், 20 ஜனவரி 2021 (11:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒருபக்கம் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி விட்ட நிலையில் மறுபக்கம் தேர்தல் ஆணையம் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதியவர்களை சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில் தமிழக வாக்காளர் பட்டியலின் இறுதி வடிவத்தை தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.26 கோடி பேர் என தெரிய வந்துள்ளது. அதில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்களும் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :