வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (15:56 IST)

அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர கனமழை! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர கனமழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் சென்னையில் எதிர்பாராத விதமாக திடீர் கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று முதலாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடற்கரையோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிர கனமழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் தாழ்வான பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.