தொடர்புடைய செய்திகள்
- 20 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு – இந்திய நிலவரம்!
- வட கொரிய அதிபரின் மக்களுக்கான புத்தாண்டு செய்தி!
- நெட்பிளிக்ஸ் உலக டாப் 10 ல் மின்னல் முரளி!
- இந்தியன் 2 அப்டேட்… விவேக்குக்கு பதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்!
- தோனியிடம் என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்டேன்… ஓய்வுக்குப் பின் வாய் திறக்கும் ஹர்பஜன் சிங்!
குடித்து விட்டு கும்மாளம் போடுவது ஆங்கிலப் புத்தாண்டு… இந்து முன்னணியின் சர்ச்சை போஸ்டர்!
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூர் இந்து முன்னணியினர் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு நாளாக ஆங்கிலப் புத்தாண்டு நாள் உள்ளது. இதையடுத்து நேற்று முதலில் நியுசிலாந்து புத்தாண்டு கொண்டாடியதை அடுத்து வரிசையாக ஒவ்வொரு நாடும் புத்தாண்டுகளைக் கொண்டாடி வருகின்றன. இந்தியா ஒட்டுமொத்தமாக இன்று புத்தாண்டை கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளோடு கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் இந்து முன்னணியினர் ஆங்கிலப் புத்தாண்டை விமர்சனம் செய்யும் விதமாக ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் குடித்துவிட்டு கும்மாளம் போடுவது ஜனவரி -1. பெரியவர்களிடம் ஆசி பெற்று ஆலயம் செல்வது சித்திரை -1. அந்நிய புத்தாண்டை புறக்கணிப்போம். தமிழர் பண்பாட்டைக் காப்போம் என எழுதப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
