வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (10:58 IST)

22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் சில நாட்களுக்கு தமிழகத்தில் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம்,  நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கமான வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.