1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu special bus for new year

3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்; 1.65 லட்சம் பேர் பயணம்! – புத்தாண்டு ரிப்போர்ட்!

Tamilnadu
தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக 1.65 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. நாளை புனித வெள்ளி தொடர்ந்து சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊர் புறப்பட்டனர்.

அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக போக்குவரத்துத் துறை 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இந்த சிறப்பு பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் பயணித்துள்ளதாக கூறியுள்ள போக்குவரத்துத் துறை திரும்ப வருவதற்கு 17ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆறாம் வகுப்பு பாடத்தில் ரம்மி..! – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!