செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 14 ஏப்ரல் 2022 (13:02 IST)

ஆளுனரின் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும்! – ஜெயக்குமார் உறுதி!

ஆளுனரின் தேநீர் விருந்தை பல கட்சிகளும் புறக்கணித்து வரும் நிலையில் அதிமுக கலந்து கொள்ள உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி ஆளுனர் மாளிகையில் தமிழக கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆளுனர் மீதான குறைகளை சுட்டிக்காட்டி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக மற்றும் தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் ஆளுனரின் தேநீர் விருந்தில் அதிமுக கண்டிப்பாக கலந்து கொள்ளும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.