1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 14 ஏப்ரல் 2022 (17:21 IST)

விருந்துக்கு வரலைன்னா செலவு மிச்சம்! – திமுக முடிவு குறித்து அண்ணாமலை!

Annamalai
ஆளுனர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் செல்லாதது குறித்து பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ் புத்தாண்டையொட்டி சென்னையில் ஆளுனர் மாளிகையில் ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து தருவதற்காக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஆளுனரிடம் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.

இந்த விருந்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மட்டும் கலந்து கொள்ள உள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாததால் செலவு மிச்சமாகும் என பேசியுள்ளார்.